18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் “தீமையை எதிர்த்து போராடு” ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா..

நெல்லையில் “தீமையை எதிர்த்து போராடு” ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா..

எழுதியவர்: Abubakker Sithik March 12, 2024, 3:28 pm

நெல்லையில் “தீமையை எதிர்த்து போராடு” ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா..

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும் சென்னை எப்சிபா அறக்கட்டளையின் இணைந்து நடத்திய தீமையை எதிர்த்து போராடு என்கிற ஓவியப் போட்டியின் பரிசளிப்பு விழா பிஷப் சார்ஜன்ட் அன்பில் சிற்றாலயத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்வில் வந்துள்ள அனைவரையும் முனைவர் ஜெயராஜ் (நிறுவனர் ஹெப்சிபா அறக்கட்டளை) வரவேற்று நிகழ்வு குறித்த அறிமுக உரை நிகழ்த்தினார். ஆமோஸ் தலைமையுரை வழங்கினார். நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி முன்னிலை வகித்தார். தொடர்ந்து முதன்மை பொறியாளர் (ஓய்வு) சண்முகசுந்தரம் சிறப்புரை ஆற்றினார்.

தீமையை எதிர்த்து போராடு என்கிற தலைப்பு குறித்து மாணவி கார்த்திகா மற்றும் மாணவர் ஜெபி பேசினர். தொடர்ந்து அதே தலைப்பு குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் அனு, இமானுவேல் ஆகியோர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கவிஞர் சுப்பையா வாழ்த்துரை வழங்கினார். பிஷப் சார்ஜன்ட் அன்பின் இல்லம் கதிர்வேல் நன்றியுரை ஆற்றினார். மாணவர்களின் ஓவிய படைப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தன.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!