18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வீராசமுத்திரம் பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை திறப்பு..

வீராசமுத்திரம் பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை திறப்பு..

எழுதியவர்: Abubakker Sithik March 12, 2024, 8:37 am

வீராசமுத்திரத்தில் 7 லட்சம் மதிப்பில் தார் சாலை; மாவட்ட கவுன்சிலர் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட வீராசமுத்திரம் ஊராட்சியில், மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி கோதர் மைதீன் நிதி பரிந்துரையின் கீழ் மாலிக் நகர் பஸ் நிறுத்தம் முதல் வீராசமுத்திரம் ஆற்றுப்பாலம் வரை ரூபாய் ஏழு லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை திறக்கப்பட்டது. 2023-2024 மாநில நிதி குழு மானியம் மூலம், வீரா சமுத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை திறப்பு நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவி ஜீனத் பர்வீன் யாகூப், துணைத்தலைவர் நாகூர் மைதீன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

திமுக மாவட்ட நிர்வாகி கோதர் மைதீன், சம்பன்குளம் கவுன்சிலர் ஜஹாங்கீர், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் அஹமது ஈஸாக், திமுக இளைஞரணி நிர்வாகி சதாம், வீராசமுத்திரம் ஜமாத் தலைவர் ஹாஜாமைதீன், செயலாளர் ஹயாத், கடையம் ஒன்றிய ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் ஜப்பார் ஆலிம், தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கட்டி அப்துல் காதர், வீரா சமுத்திரம் வார்டு உறுப்பினர் ரமேஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி கோதர் மைதீன், தார் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், திமுக மாவட்டப் பிரதிநிதி யாகூப் வரவேற்றார். ஒப்பந்தக்காரர் தங்கராஜ் நன்றி கூறினார். மந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாண சுந்தரம், திமுக விவசாய அணி சிங்ககுட்டி, முன்னாள் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆரிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!