18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 55 வது உதய தினம்..

மதுரையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 55 வது உதய தினம்..

எழுதியவர்: Abubakker Sithik March 11, 2024, 10:05 pm

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 55 வது உதய தின விழா..

மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில் 55 வது உதய தினம் கொண்டாடப்பட்டது. மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் விழாவில் கலந்து கொண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை பணியில் ஈடுபட்டு வருகிறது. மதுரை விமான நிலையம் அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாம் அமைக்கப்பட்டது, இதில் 360 வீரர்கள் பணியில் உள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை உதய தினமான இன்று 55வது உதய தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மத்திய துறை பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் விழாவிற்கு தலைமை ஏற்றார். மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் கலந்து கொண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மதுரை விமான நிலைய துணை மேலாளர் ஜானகிராமன் மேலாளர் சுந்தர்ராஜன் மதுரை விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அலுவலர் கணேசன், அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் செல்வகுமார் மற்றும் தாசில்தார் கோபி மற்றும் பல்வேறு விமான நிறுவனர் ஊழியர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை வெடிகுண்டு தடுப்பு பிரிவு மோப்ப நாய்கள் பல்வேறு சாதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எரியும் தீயில் பாய்ந்து சாகசம் செய்வது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் அதிகாரிகள் உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது மேலும் அதிரடிப்படை வீரர்கள் எதிரிகளிடமிருந்து தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி கட்டினர். விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் கூறும் போது மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மேலும் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகளை சரி பார்ப்பதும் பயணிகள் தொலைந்த உடமைகளை மீட்டுத் தருவது போன்ற பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் குறிப்பிட்டார்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!