17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பொது கூட்டம் !

கீழக்கரையில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பொது கூட்டம் !

எழுதியவர்: Baker BAker March 8, 2024, 8:56 pm

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பெத்தரி தெருவில் மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு (WIM) விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பெண்களின் வலிமை மற்றும் கண்ணியத்தை வலியுறுத்தி மாபெரும் பொது கூட்டம் விம் மாவட்ட தலைவி ரம்ஜான் பேகம் தலைமையில் மாவட்டத் துணைத் தலைவி முபினா முன்னிலையில் நடைபெற்றது. விம் நகர் செயலாளர் மசூதா வரவேற்புரை வழங்கினார். விம் நகர் தலைவி செய்யது ஜாபிரா தொகுப்புரை வழங்கினார். இக்கூட்டத்தில் பெண்கள் வலிமை பெற வேண்டும் முன்னேற்றம் பெற வேண்டும் என்றும் அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றும் குறிப்பாக அரசியலில் பெண்கள் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. விம் மாநில செயற்குழு உறுப்பினர் கதிஜா பீவி , எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கீழை ஐஹாகீர் அருஸி , பெரியபட்டிணம் ஊராட்சி மன்ற தலைவி அக்பர் ஜான் , ஐந்தாவது வார்டு உறுப்பினர் ரஜப்பு நிஷா , விம் மாவட்ட பொதுச் செயலாளர் சித்தி நிஷா , கீழக்கரை எஸ்டிபிஐ கட்சியில் 18 வது வார்டு கவுன்சிலர் சகினா பேகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். எஸ்டிபிஐ கட்சியின் நகர் செயற்குழு உறுப்பினர் பைசல் கருத்துரை வழங்கினார். விம் நகர் பொருளாளர் சையது சுல்தான் பீவி நன்றி உரை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் விம் நகர் துணைத் தலைவி அஜிதா பேகம் , துணைச் செயலாளர் அஸ்மது நிஷா , செயற்குழு உறுப்பினர் ரஹ்மத் ரமீஸா பேகம் , முபிதா , நஸ்ரின் தஸ்லிமா , எஸ்டிபிஐ கட்சியின் நகர் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!