17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலஞ்சி டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்லூரியில் பரிசளிப்பு விழா..

இலஞ்சி டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்லூரியில் பரிசளிப்பு விழா..

எழுதியவர்: Abubakker Sithik March 8, 2024, 11:55 am

இலஞ்சி டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்லூரியில் பரிசளிப்பு விழா..

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் செங்கோட்டை அரசு நூலகம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் அமிர்தம் செல்லத்துரை, அந்தோணி, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் (பொ). தங்கம் வரவேற்றார்.

திருநெல்வேலி திருமண்டல உப தலைவர் ரெவ சுவாமிதாஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ ஆசிரியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார். நூலகர் டாக்டர் ஏஞ்சலின், உதவி பேராசிரியர்கள் ஷீலா நவரோசி, முத்துலட்சுமி, லீதியாள் சொர்ண ஜெயா, ஹெப்சி, அனிதா, உடற்கல்வி ஆசிரியர் ஐசக், அலுவலக பணியாளர் பிரெட்ரிக், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!