17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆண்கள் ஆசிரியர்கள் ஓய்வு அறையில் பேப்பர் திருத்திய மாணவிகள்; புகைப்படம் வைரல்..

ஆண்கள் ஆசிரியர்கள் ஓய்வு அறையில் பேப்பர் திருத்திய மாணவிகள்; புகைப்படம் வைரல்..

எழுதியவர்: Abubakker Sithik March 8, 2024, 7:47 am

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்கள் ஆசிரியர்கள் ஓய்வு அறையில் பேப்பர் திருத்திய மாணவிகள்; புகைப்படம் வைரல்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் ஓய்வு அறையில் அமர வைக்கப்பட்டு உதவி தலைமையாசிரியர் அறிவுறுத்தலின்படி பேப்பர் திருத்தும் காட்சி தற்போது வைரலாகி உள்ளது.

திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக இருப்பவர் கர்ணன். கடந்த மாதம் நடந்த இடை தேர்வில் மாணவிகள் எழுதிய விடைத்தாள்களை தான் திருத்துவதற்கு பதிலாக 12-ம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவிகளை தங்களது ஓய்வு அறைக்கு வரவைத்து பேப்பரை திருத்த வைத்துள்ளனர். மேலும் மாணவிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்களிலும் மாணவிகளை எழுத வைத்துள்ளார். இது குறித்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வயுகிறது.. ஆசிரியர்கள் செய்ய வேண்டிய வேலையை மாணவியர்களை செய்ய வைத்தது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!