18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வடகரை கீழ்பீடாகை பேரூராட்சி நிர்வாக அலுவலர் மாற்றத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

வடகரை கீழ்பீடாகை பேரூராட்சி நிர்வாக அலுவலர் மாற்றத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: Abubakker Sithik March 8, 2024, 12:11 am

வடகரை கீழ்பீடாகை பேரூராட்சி நிர்வாக அலுவலர் மாற்றத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பீடாகை பேரூராட்சி நிர்வாக அலுவலர் மாற்றத்தை கண்டித்து வடகரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் அப்துல் பாசித் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும் 2 வது வார்டு கவுன்சிலருமான முத்து முஹம்மது என்ற அன்சாரி கண்டன உரையாற்றினார்.

நகர செயலாளர் சாஜித் ஒலி, மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் சையது இப்ராஹிம், விமன் இந்தியா மூவ்மெண்ட் மகளிர் அணியின் மாவட்ட தலைவர் பரக்கத், செயலாளர் யாஸ்மின் ,பொருளாளர் ஆயிஷா, நகர பொருளாளர் அப்துல் ரகுமான், நகர செயற்குழு உறுப்பினர் திவான், மருத்துவ சேவை அணி நகர பொறுப்பாளர் நூருல் அமீன், கிளை நிர்வாகிகள் ஆசிக் (நகர ஊடக ஒருங்கிணைப்பாளர்), கலீல் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!