17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » Uncategorized » பெரியார் சிலை சேதம்-தமிழகத்தில் பதற்றம்…

பெரியார் சிலை சேதம்-தமிழகத்தில் பதற்றம்…

எழுதியவர்: Mohamed March 6, 2018, 11:40 pm

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் அருகே இருந்த பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக பாஜக நிர்வாகி முத்துராமன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததை தொடர்ந்து தலித் மற்றும் சிறுபான்மையினர் மீது கொலை வெறி தாக்குதல் நடந்து வருகிறது.

இந்நிலையில் திரிப்புராவில் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பாஜக ஆட்சி அமைகின்ற வேளையில் அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டுள்ளது.

இவ்வேளையில் பாஜக வின் தேசிய செயலாளர் எச்.ராஜா  “ஜாதி வெறியன் பெரியார் சிலை தமிழகத்தில் அகற்றப்படும்” என்று தனது டுவிட்டர் பகுதியில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தமிழகத்திலும் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!