17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கரும்பு விவசாயி சின்னம் கோரி உச்ச நீதிமன்றம் சென்ற சீமான்..

கரும்பு விவசாயி சின்னம் கோரி உச்ச நீதிமன்றம் சென்ற சீமான்..

எழுதியவர்: Askar March 6, 2024, 7:18 pm

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 2016 சட்டமன்றத் தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டி போட்டது. அதன்பிறகு வந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. எனினும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.இதனை அடுத்து மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சீமான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்தார். அவ்வழக்கில், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பாரதீய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதனையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றம், சீமான் மனுவை தள்ளுபடி செய்தது.இந்நிலையில் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!