18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்கேற்று திரும்பிய மதுரை கல்லூரி மாணவிக்கு பாராட்டு விழா..

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்கேற்று திரும்பிய மதுரை கல்லூரி மாணவிக்கு பாராட்டு விழா..

எழுதியவர்: Abubakker Sithik March 6, 2024, 1:20 pm

மதுரைக் கல்லூரியின் NCC மாணவி செல்வி. கோபிகா சமீபத்தில் புது டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழக NCC அணி சார்பாக பங்கேற்று திரும்பி உள்ளார். இதனை பாராட்டும் விதமாக மதுரைக் கல்லூரி NCC துறை மற்றும் NCC 7 பட்டாலியன் சார்பாக மாணவிக்கு பாராட்டு விழா மதுரைக் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் NCC 7 பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி லெப்டினென்ட் கர்னல் சிவகுமார். கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கினார். மதுரைக் கல்லூரி வாரிய செயலர் நடனகோபால், பொருளாளர் ஆனந்த் சீனிவாசன், மதுரைக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் சுரேஷ் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேராசிரியர்கள் முத்துக்குமார், ஷாகுல் ஹமீது, சிவராம கிருஷ்ணன் மற்றும் பல பேராசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர். மதுரைக் கல்லூரியின் NCC அதிகாரி லெப்டினென்ட் கார்த்திகேயன் பாராட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!