ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 34 வது போட்டி நடைபெற்றது, இதில் தமிழ்நாடுகோவா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பாண்டிச்சேரி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், உள்ளிட்ட 32 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர், தேசிய அளவிலான நடுவர்கள்குழு போட்டியை 5 நாட்கள் கீழக்கரையில் நடத்தியது. இறுதிப்போட்டியில் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த ஆண்கள் அணியினர் டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றுக் கோப்பையை தட்டி சென்றது, இரண்டாவதாக தமிழ்நாட்டைச் சார்ந்த வீரர்கள் வெற்றி பெற்றனர், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் வெற்றி கோப்பையை வழங்கி பாராட்டி வாழ்த்தினார், இதில் பல்வேறு மாநிலம் சார்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் இந்திய அளவிலான விளையாட்டு சங்கம் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கீழக்கரையில் 34 வது தேசிய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி !
எழுதியவர்: Baker BAker March 5, 2024, 11:31 pm




You must be logged in to post a comment.