18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு விழா..

தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு விழா..

எழுதியவர்: Abubakker Sithik March 5, 2024, 11:08 pm

தென்காசி மாவட்டம் புதுச்சுரண்டை டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஜெகன் தலைமை வகித்தார் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா பாய் ஜெயராணி முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியர் அகிலா வரவேற்று பேசினார். தேசிய திறனாய்வு தேர்வு வெற்றி பெற்ற மாணவர்கள் மாதேஸ்வரன், சிவ சூரியா ஆகியோருக்கு சுரண்டை போலீஸ் எஸ்ஐ சின்னத்துரை பொன்னாடை அணிவித்து பாராட்டி கேடயம் வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் இலஞ்சி கல்வியியல் கல்லூரி தாளாளர் ராஜகுமார், புதுச்சுரண்டை சேகர பொருளாளர் ஸ்டீபன் ஜெபராஜா, உதவி ஆசிரியர்கள் சார்ந்த குமாரி, சுந்தரி, மதி, அன்பு கிரேஸ், அமலா, பிரபா, சுபா, ஜோதி மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

மேலும், தென்காசி மாவட்டம் சுரண்டை ஜவஹர்லால் நடுநிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஜேபஸ் பொன்னையா தலைமை வகித்தார். முன்னாள் தலைமையாசிரியர் செல்வராணி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் பொடி மோனிகா வரவேற்றார். தென்காசி எம்எல்ஏவும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ். பழனி நாடார் தேர்வில் வெற்றி பெற்ற மகாபாரதி, புஷ்பராஜ், திருமலைச் செல்வி ஆகியோருக்கு கேடயம் வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!