17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் இரவு பகலாக தொடர் போராட்டத்தை தொடங்கிய வருவாய் துறை அலுவலர்கள் ! வேடிக்கை பார்க்கும் அரசு !!

ராமநாதபுரத்தில் இரவு பகலாக தொடர் போராட்டத்தை தொடங்கிய வருவாய் துறை அலுவலர்கள் ! வேடிக்கை பார்க்கும் அரசு !!

எழுதியவர்: Baker BAker March 4, 2024, 8:58 pm

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக உள்பகுதியில் 10 அம்ச கோரிக்கையினை தமிழக அரசு நிறைவேற்ற கோரி, வருவாய் துறை ஊழியர்கள் இரவு பகலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தினை துவங்கினர். ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய் துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளான மேம்படுத்தப்பட்ட ஊதியத்தினை உடனடியாக வழங்க வேண்டும், புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி மூன்றாம் கட்ட போராட்டமாக அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரையான அனைத்து நிலை அலுவலர்களும் இரவு பகலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தினை துவங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து ஊழியர்களும் கோஷங்களை எழுப்பி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து இரவு பகலாக ஆண்கள் பெண்கள் என அனைத்து ஊழியர்களும் தேவையான உணவை அந்த இடத்திலேயே சமைத்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.தமிழக அரசு தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் வருகின்ற 7ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் அலுவலகம் முன்பு தமிழகத்தில் இருந்து சுமார் 14,000 மேற்பட்ட வருவாய் துறை சங்கத்தின் ஊழியர்கள் கலந்துகொண்டு காத்திருப்பு போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து பணிகளையும் புறக்கணிக்கப் போவதாகவும் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!