17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமத்துவ எழுச்சி விரதம் என்ற பெயரில் உசிலம்பட்டியின் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

சமத்துவ எழுச்சி விரதம் என்ற பெயரில் உசிலம்பட்டியின் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan March 3, 2024, 2:46 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் 3 பிரச்சனைகளை முன்வைத்து சமத்துவ எழுச்சி விரதம் என்ற பெயரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் தேவர் சிலை அருகே இடிக்கப்பட்ட பேருந்து நிலையம்; கட்டிமுடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும் மற்றும் அரசுக்கு சொந்தமான வணிக வளாக கடைகளை இடித்துவிட்டு புதிய வணிக வளாகம் கட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மார்க்கெட் கடை வியாபாரிகள் அதனை சார்ந்த தொழிலாளர்கள் 5200 குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு நிரந்தர தீர்வு வேண்டும் மற்றும் உசிலம்பட்டி நகர் போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபட நான்கு வழி சாலை அமைத்திட வேண்டும் என்பது உள்பட 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு ஆர்ப்;பாட்டம் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் எஸ்.கே. சிவமுருகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும்; மார்க்கெட் கடை வியாபாரிகள் கலந்து கொண்டனர்.இதில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப பட்டன.ஆர்ப்பாட்ட முடிவில் 3 அம்ச கோரிக்கைகளை அடங்கிய துண்டு பிரசுரங்கள் வீதிவீதியாக வழங்கப்பட்டன.

உசிலை மோகன்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!