17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் கார் மோதிய விபத்து; பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்த சோகம்..

மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் கார் மோதிய விபத்து; பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்த சோகம்..

எழுதியவர்: Abubakker Sithik March 3, 2024, 2:35 pm

மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் கார் மோதிய விபத்து; பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்த சோகம்..

மதுரை கரிமேடு பகுதியில் உள்ள மோதிலால் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருகிறார் பாத்திமா மேரி. அண்ணன் அந்தோணி செல்வராஜ் உடன் ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க கைரேகை வைப்பதற்காக வந்துள்ளார். அப்போது பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மீனாட்சி பஜார் பகுதியில் சாலையை கடக்கும் பொழுது நான்கு சக்கர வாகனத்தில் ராஜசேகர் என்பவர் தனக்கன்குளம் பகுதியில் இருந்து அதிவேகமாக வரும் போது பாத்திமா மேரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானர்.

சம்பவத்தை அறிந்த திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காரில் வேகமாக வந்து மோதி விபத்து ஏற்படுத்திய ராஜசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!