17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆடு திருடர்கள் இருவர் கைது; 11 ஆடுகள் மீட்பு..

ஆடு திருடர்கள் இருவர் கைது; 11 ஆடுகள் மீட்பு..

எழுதியவர்: Abubakker Sithik March 2, 2024, 10:02 pm

ஆடு திருடர்கள் இருவர் கைது; 11 ஆடுகள் மீட்பு..

தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த.ஆடு திருடர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆடுகளை மேய்த்து வரும் பட்டமுத்து என்ற நபர் அவருக்கு சொந்தமான 03 ஆடுகளை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினர் துரிதமாக விசாரணை மேற்கொண்டு மேற்படி ஆடுகளை திருடிய சிவராம பேட்டை பகுதியை சேர்ந்த ராமர் பாண்டியன் என்பவரின் மகன் பேச்சிமுத்து (24) மற்றும் கண்ணன் என்பவரின் மகன் முப்புடாதி குமார் (24) ஆகிய இரண்டு நபர்களை காவல் துறையினர் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் தொடர் விசாரணை செய்த போது அவர்கள் அச்சன்புதூர் பகுதியில் நான்கு ஆடுகளும், சுரண்டை பகுதியில் மூன்று ஆடுகளும் மற்றும் ஆய்க்குடி பகுதியில் ஒரு ஆடும் ஆக மொத்தம் 11 ஆடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இது குறித்து மேற்படி நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். திருடப்பட்ட 11 ஆடுகளும் மீட்கப்பட்டது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!