18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆறு மாத தொடர் போராட்டம் வெற்றி!; மதுரை பாராளுமன்ற உறுப்பினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..

ஆறு மாத தொடர் போராட்டம் வெற்றி!; மதுரை பாராளுமன்ற உறுப்பினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..

எழுதியவர்: Abubakker Sithik March 1, 2024, 5:38 pm

மதுரை ரயில்வே விளையாட்டு மைதானத்தை காக்கிற ஆறுமாத தொடர் போராட்டம் வெற்றி!; பாராளுமன்ற உறுப்பினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கூறுகையில், மதுரை ரயில்வே விளையாட்டு மைதானம் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிடக் கோரி ரயில்வே நில பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பல்லாயிரக் கணக்கான கையெழுத்துகளை பெறும் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தொடர்ந்து மதுரைக்காகத்தான் என்கிற விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. நமது தொடர் முயற்சியின் விளைவாக ரயில்வே விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு கொடுக்கிற எந்த முயற்சியிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம் என்று இன்று காலை நடைபெற்ற தெற்கு ரயில்வே மதுரைக்கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் தென்னக இரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் வாக்குறுதி கொடுத்தார்.

மதுரையின் நுரையீரலைக் காக்கிற மகத்தான போராட்டத்தின் வெற்றியை மக்களிடையே பகிர்ந்து கொள்ளும் விதமாக மதுரை அரசரடி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த விளையாட்டு வீரர்களுக்கும், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பொது மக்களுக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தார். உடன் ரயில்வே நில பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!