17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » விளையாட்டு செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்..

எழுதியவர்: Abubakker Sithik March 1, 2024, 3:39 pm

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களை பெறுவதில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய சம்மந்தப்பட்ட துறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தங்களுக்கு தேவையான உதவிகள் பெற மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், புகைப்படம் 5 ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் இம்முகாமில் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

முகாம் நடைபெறும் இடம் : இ.சி.ஈ. அரசு மேல் நிலைப்பள்ளி, (புதிய பேருந்து நிலையம் அருகில்) தென்காசி.

நாள் : 02.03.2024, நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!