17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை ரயில்வே மைதானம் தனியாரிடம் ஒப்படைக்கப்படவில்லை; மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தகவல்..

மதுரை ரயில்வே மைதானம் தனியாரிடம் ஒப்படைக்கப்படவில்லை; மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தகவல்..

எழுதியவர்: Abubakker Sithik March 1, 2024, 8:57 am

மதுரை ரயில்வே மைதானத்தை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப் படவில்லை என தெற்கு ரயில்வே மேலாளர் திட்ட வட்டமாக தெரிவித்து உள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் ரயில்வே திட்டங்கள் குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் மதுரை ரயில்வே நிலைய அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M குமாா், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசிய போது, மதுரை ரயில்வே மைதானத்தை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப்படவில்லை என தெற்கு ரயில்வே மேலாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் எனவும், 6 மாதமாக நடத்தப்பட்ட போராட்டத்தின் வாயிலாக மதுரை ரயில்வே மைதானம் காப்பாற்றப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக எழுப்பப்பட்ட 18 கோரிக்கைகளுக்கு மேலாளர் பதிலளித்துள்ளார். தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே வாரத்திற்கு ஒரு முறை இயக்கப்பட்ட ரயில் இனி 3 முறை ரயில் இயக்கப்படும் என கூறியுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!