18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென் மாவட்டங்களில் எந்த தொகுதியிலும் போட்டியிட தயார்; தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பேட்டி..

தென் மாவட்டங்களில் எந்த தொகுதியிலும் போட்டியிட தயார்; தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பேட்டி..

எழுதியவர்: Abubakker Sithik March 1, 2024, 8:46 am

தென் மாவட்டங்களில் எந்த தொகுதியிலும் போட்டியிட தயார்; தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பேட்டி..

சென்னை – போடி ரயிலை தினந்தோறும் இயக்க வேண்டும், பொது மக்கள் நலன் கருதி மதுரை – போடி பாசஞ்ஞ்சர் ரயில் நேரத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். திண்டுக்கல் – லோயர் கேம்ப் வரை 123 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்.

விரைவு ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்ல கோரிக்கை வைத்துள்ளேன். போடி ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் அமைக்க கோரிக்கை வைத்துள்ளேன்.

ஓரிரு நாட்களில் பாஜக – ஓ.பி.எஸ் – டி.டி.வி கூட்டணி முடிவு எட்டப்படும். பிரதமர் மீண்டும் தமிழகம் வருவதற்கு உள்ளாக கூட்டணி முடிவாக வாய்ப்பு. தனித்து போட்டியிட வாய்ப்பில்லை, மீண்டும் பிரதமராக மோடி தான் வர வேண்டும் எனும் நிலைப்பாட்டில் இருக்கிறோம்.

தென் தென் மாவட்டங்களில் எந்த ஒரு நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டியிட தயாராக இருக்கிறேன்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!