17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு பள்ளி மாணவ மாணவிகள் அறிவியல் கண்காட்சியில் அசத்தல்..

அரசு பள்ளி மாணவ மாணவிகள் அறிவியல் கண்காட்சியில் அசத்தல்..

எழுதியவர்: Abubakker Sithik March 1, 2024, 8:34 am

தேசிய அறிவியல் தினத்தை ஒட்டியும், முதன் முதலில் தமிழகத்தைச் சார்ந்த அறிவியல் விஞ்ஞானி சர் .சி .வி . ராமனுக்கு நோபல் பரிசு கிடைத்த தினத்தை ஒட்டி, அரசு ஊராட்சி பள்ளி மாணவ மாணவிகள் அறிவியல் கண்காட்சியில் அசத்தல்; சர். சி .வி . ராமன் உருவ முகமூடி அணிந்து மாணவ, மாணவிகள் பங்கேற்பு..

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ. மாணவிகள் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, டாக்டர் சர் சி வி ராமனுக்கு நோபல் பரிசு கிடைத்த தினத்தில், அவரை நினைவு கூறும் வகையில் ஒன்று முதல் ஐந்து வரை உள்ள பயிலும் மாணவ மாணவியர்கள், அறிவியல் தொழில்நுட்ப தொடர்பான சாதனங்களை செய்து கண்காட்சியில் வைத்து அசத்தினர். மேலும் சர்.சி.வி ராமன் உருவம் பொறித்த முகமூடி அணிந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து அசத்தினர். இதனை தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!