17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உயிருள்ள வரை மறக்க மாட்டோம்; மனம் மகிழ்ந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த தென்காசி மாவட்ட தம்பதியினர்..

உயிருள்ள வரை மறக்க மாட்டோம்; மனம் மகிழ்ந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த தென்காசி மாவட்ட தம்பதியினர்..

எழுதியவர்: Abubakker Sithik February 28, 2024, 10:29 am

உயிருள்ள வரை மறக்க மாட்டோம்; மனம் மகிழ்ந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த தென்காசி மாவட்ட தம்பதியினர்..

“உயிருள்ள வரை மறக்க மாட்டோம்” என மனம் மகிழ்ந்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு தென்காசி மாவட்ட தம்பதியினர் நன்றி தெரிவித்தனர். உரிய நேரத்தில் நூற்றுக் கணக்கான உயிர்களை காப்பாற்றிய தென்காசி மாவட்ட தம்பதிகளுக்கு பொன்னாடை அணிவித்து ரூபாய் 5 இலட்சம் வெகுமதி வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டினார்.

இது குறித்து தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சண்முகையா வடக்குத்தியாள் தம்பதியினர் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் எங்களை கைகுலுக்கி, சால்வை அணிவித்து பாராட்டி, ரூபாய் 5 இலட்சம் பரிசும் அளித்துள்ளார். இந்த அளவிற்கு எங்களை பெருமைபடுத்திய முதலமைச்சரை உயிருள்ள வரை மறக்க மாட்டோம் என்றும், முதலமைச்சரை நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறி, மனம் மகிழ்ந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!