17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டிய விவசாய சங்கத்தினர் கைது..

மதுரை வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டிய விவசாய சங்கத்தினர் கைது..

எழுதியவர்: Abubakker Sithik February 27, 2024, 5:05 pm

டெல்லியில் போராடும் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்வதை கண்டித்து மதுரை வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டிய விவசாய சங்கத்தினர் கைது.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் SKM (NP) அமைப்பின் சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்வதை கண்டித்தும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய நிரந்தர சட்டம் கொண்டு வரவும், எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றிடவும், கடன் முழுவையும் தள்ளுபடி செய்திடவும் வலியுறுத்தி மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய பொருள்களுக்கு உரிய விலை வழங்காத மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற விவசாய சங்க பிரதிநிதிகள் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!