18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாகன ஓட்டிகளே உஷார்!-வீடு தேடி வரும் அபராத தொகை ரசீது..

வாகன ஓட்டிகளே உஷார்!-வீடு தேடி வரும் அபராத தொகை ரசீது..

எழுதியவர்: Askar February 27, 2024, 12:30 pm

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் வீடு தேடிச்சென்று அபராத ரசீது கொடுக்கும் திட்டத்தை, போலீசார் அமல்படுத்தி உள்ளனர்.

சென்னையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கண்காணித்தும் அபராதம் விதிக்கப்படுகிறது.

இதுகுறித்து, விதிமீறலில் ஈடுபடுவோரின் மொபைல் போன் எண்ணிற்கு, போலீசார் தகவல் அனுப்புகின்றனர். கட்டத் தவறினால், கால்சென்டர் வாயிலாக நினைவூட்டுகின்றனர்.

இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக, விதிமீறலில் ஈடுபடுவோரின் வீட்டிற்கே சென்று, அபராத ரசீது கொடுக்கும் திட்டத்தை, போக்குவரத்து போலீசார் துவக்கினர். சென்னையில் சோதனை ரீதியாக இந்த நடைமுறை துவக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில்,’

வீடு தேடிச் சென்று அபராத ரசீது தருவதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதை, எந்த வகையில் சரியாக செயல்படுத்த முடிகிறது என்பதை பார்த்து மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும் என்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!