18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் பி ஹியூமன் நடத்திய இரத்ததான முகாம் !

கீழக்கரையில் பி ஹியூமன் நடத்திய இரத்ததான முகாம் !

எழுதியவர்: Baker BAker February 25, 2024, 9:14 pm

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மஹாலில் பி ஹியூமன் மற்றும் கிரசண்ட் இரத்த வங்கி மற்றும் விம் பெண்கள் அமைப்பு இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக 18 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சகினா பேகம் கலந்து கொண்டார். பி ஹியூமன் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களால் துவங்கப்பட்டு கிடைக்கும் நேரங்களில் பொதுமக்களுக்கு சேவை பணிகளை செய்து வருகின்றனர். இளைஞர்களின் பணிகளை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் எஸ்டிபிஐ கட்சியின் கீழக்கரை நகர் நிர்வாகிகள் ஆதரவோடு இன்று இரத்ததான முகாமை முதல் முறையாக நடத்தியுள்ளனர். ஏராளமான இளைஞர்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர் . மேலும் இது போன்ற இளைஞர்களின் சேவை பாராட்டக் கூடியது என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!