17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமேஸ்வரம் மீனவர்களின் தொடர் உணரணவிரத்போராட்டம் தற்காலிகமாக வாபஸ் ! விரைவில் மீனவர்கள் தமிழக முதல்வரை சந்திக்க திட்டம் !!

ராமேஸ்வரம் மீனவர்களின் தொடர் உணரணவிரத்போராட்டம் தற்காலிகமாக வாபஸ் ! விரைவில் மீனவர்கள் தமிழக முதல்வரை சந்திக்க திட்டம் !!

எழுதியவர்: Baker BAker February 25, 2024, 8:51 pm

ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை வெளிக்கடை சிறையில் உள்ள ஐந்து ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 16ஆம் தேதி முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி மீனவர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் விசைப்படகு உரிமம் உள்ளிட்டவற்றை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரீடம் வழங்குவதற்காக ராமேஸ்வரம் மீன் பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் நடை பயணமாக ராமநாதபுரம் நோக்கி சென்றபோது அவர்களை தடுத்து நிறுத்திய மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு சந்திரன் மீனவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். இதனையடுத்து நடை பயணத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்ற மீனவர்கள் நேற்று காலை முதல் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் உண்ணாவிர போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் சிறையில உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்து .கொண்டு மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வந்த நிலையில் இன்று மாலை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் உண்ணாவிரத மேடைக்கு நேரில் வந்து மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் மீனவர்களின் வழக்கு தொடர்பாக இலங்கை உயர் நீதிமன்றத்தில் இந்திய தூதரகம் மேல்முறையீடு செய்யப்பட்டு உடனடியாக மீனவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் தமிழக முதல்வரை சந்திக்க பாதிக்கப்பட்ட மீனவர்களை அழைத்துச் செல்வதாகவும் உறுதியளித்தார். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறையில் உள்ள மீனவர்களுக்கு தலா 25,000 ரூபாயையும் திமுக சார்பில் பத்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டதுடன் முதல்வரை சந்திக்க செல்லும் செலவை சட்டமன்ற உறுப்பினர் ஏற்றுக் கொள்வதாக கூறியதையடுத்து மீனவர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!