18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் “கலைஞர் கண்ட தமிழ்நாடு” சிறப்பு சொற் பொழிவு; நினைவுப் பரிசு வழங்கல்…

நெல்லையில் “கலைஞர் கண்ட தமிழ்நாடு” சிறப்பு சொற் பொழிவு; நினைவுப் பரிசு வழங்கல்…

எழுதியவர்: Abubakker Sithik February 25, 2024, 3:22 pm

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞரும் தமிழும் – கலைஞர் கண்ட தமிழ்நாடு சிறப்பு சொற்பொழிவு; நினைவுப்பரிசு வழங்கல்

முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் இலக்கிய கூட்டத்தின் 32வது கூட்டத்தினை அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமையேற்று தொடங்கி வைத்தார். கலை பதிப்பகத்தின் ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் ‘கலைஞரும் தமிழும்’ எனும் தலைப்பில் சுப்புலட்சுமியும், ‘கலைஞர் கண்ட தமிழ்நாடு’ எனும் தலைப்பில் முருகன் சுப்பையாவும் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினர். ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் எழுத்தாளர் வள்ளி சேர்மலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். கவிஞர் முத்துசாமி நன்றி கூறினார்.

கவிஞர் சுப்பையா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். எழுத்தாளர் நாறும்பூ நாதன் சொற்பொழிவு ஆற்றியவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் செல்லப்பா, மாணிக்கவாசகம், மாடசாமி, இருளப்பன் கோபால கிருஷ்ணன், மேகலிங்கம், ஜவகர் துரை, சங்கரம்மாள், மகாலட்சுமி, நந்தினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவருக்கு கலைஞர் குறித்த நூல் பரிசாக வழங்கப்பட்டது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!