18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினவிழா..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினவிழா..

எழுதியவர்: Abubakker Sithik February 25, 2024, 1:56 pm

ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மற்றும் தெற்கு நகர, அதிமுக சார்பில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர்கள் முருகேசன், தலைமையில் குமரன் தெரு MGR சிலை அருகில் ஜெயலலிதாவின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கி கொண்டாடினர். அதே போல் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் தலைமையில் அம்மா உணவகம் முன்பு ஜெயலிதா திருஉருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்சியில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் MGR மன்ற துணைச் செயலாளர் பாபுராஜ் அதிமுக மாவட்ட இணைச் செயலாளர் அழகு ராணி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மகளீர் அணியினர் கலந்து கொண்டணர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!