18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரெயில் பயணிகள் கவணிக்க! நாளை (ஞாயிற்றுக்கிழமை) 44 மின்சார ரெயில்கள் ரத்து..

ரெயில் பயணிகள் கவணிக்க! நாளை (ஞாயிற்றுக்கிழமை) 44 மின்சார ரெயில்கள் ரத்து..

எழுதியவர்: Askar February 24, 2024, 9:50 am

சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.சென்னை கடற்கரையில் இருந்து காலை 11 மணி முதல் மதியம் 2.15 மணி வரை செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே போல, செங்கல்பட்டில் இருந்து காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் காஞ்சீபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் 25-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. மொத்தம் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணி காரணமாக கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!