18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் எம்பியிடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை மனு..

இராமநாதபுரம் எம்பியிடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை மனு..

எழுதியவர்: ஆசிரியர் February 22, 2024, 8:18 pm

இராமநாதபுரம், பிப்.22 –

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் பெரியபட்டினம் ஊராட்சியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. இக்குடையை பொதுமக்கள் நவாஸ் கனி இன்று திறந்து வைத்தார். ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி தலைவர் ரியாஸ்கான் தலைமையில் எம்பியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் பெரியபட்டினம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள் நீண்டகாலமாக இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஆகையால், மக்களின் சிரமம் போக்க கூடுதல் டாக்டர்கள் நியமிக்க கோரி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட நவாஸ் கனி கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். திருப்புல்லாணி ஒன்றிய செயலர் பீர் முஹைதீன் பெரியபட்டினம் ஊராட்சி கிளை தலைவர் நசீர் செயற்குழு உறுப்பினர்கள் சேகு, ஆஷிக், ராஜபுல்லா கான், வார்டு உறுப்பினர் மீராசா உள்ளிட்டோர் நவாஸ் கனி எம்பியை வரவேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!