17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் அதிகரித்து வரும் நாய் தொல்லை; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்..

தென்காசி மாவட்டத்தில் அதிகரித்து வரும் நாய் தொல்லை; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்..

எழுதியவர்: Abubakker Sithik February 22, 2024, 9:05 pm

தென்காசி மாவட்டத்தில் அதிகரித்து வரும் நாய் தொல்லை; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்..

தென்காசி மாவட்டத்தில் வெறிநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென்காசி நகராட்சி, கடையம் ஒன்றியம், புளியங்குடி நகராட்சி, சங்கரன்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெறி நாய்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர், வயதான முதியவர்கள், பெண்கள் என பலரும் பெரும் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட நகர ஒன்றிய நிர்வாகங்கள் உடனடியாக வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாய்களுக்கு கருத்தடை ஊசி போடுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!