இராமநாதபுரம், பிப்.22- ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே காவாகுளத்தை சேர்ந்தவர் அம்மாசி. இவர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். காவாகுளம் கிராமத்தில் அம்மா சி மனைவி பெயரில் உள்ள வீட்டுக்கு மின் இணைப்பு கோரி சிக்கல் மின் வாரிய உதவி மின் பொறியாளர் மலைச்சாமி (49) என்பவரை தொடர்பு கொண்டார் அதற்கு அவர் ரூ.12 ஆயிரம் செலவாகும் எனவும் இதில் இணைய தளத்தில் பதிவு செய்ய ரூ.5,192 போக எஞ்சிய தொகை தனக்கு தர வேண்டும் என கட்டாயப்படுத்தி கேட்டார். இது குறித்து ராமநாதபுரம் ஊழல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் குமரேசனிடம், அம்மாசி புகார் அளித்தார். இதையடுத்து ஆய்வாளர் குமரேசன் அறிவுறுத்தல் படி! ரசாயனம் தடவிய ரூ.7 ஆயிரத்தை லஞ்சமாக பெற்ற மின்வாரிய உதவி பொறியாளர் மலைச்சாமி இன்று மாலை கையும் களவுமாக பிடிபட்டார்.
ஊழல் தடுப்பு போலீஸ்காரரிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய உதவி பொறியாளர் கைது ?..
எழுதியவர்: ஆசிரியர் February 22, 2024, 7:55 pm




You must be logged in to post a comment.