18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » செங்கோட்டை நூலகத்தில் 64 வது நூல் திறனாய்வுப் போட்டி..

செங்கோட்டை நூலகத்தில் 64 வது நூல் திறனாய்வுப் போட்டி..

எழுதியவர்: Abubakker Sithik February 22, 2024, 7:26 pm

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பொது நூலகத்தில் 64-வது நூல் திறனாய்வுப் போட்டி நடந்தது. இதில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு எழுத்தாளர் சி.அன்னக்கொடி எழுதிய ‘”கி.ராவும் நானும்” என்ற நூல் திறனாய்வு செய்யப்பட்டது. இதில் 60 நபர்கள் கலந்து கொண்டு திறனாய்வு செய்தார்கள்.

இவ்விழாவிற்கு வாசகர் வட்டத் துணைத் தலைவர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். பொருளாளர் தண்டமிழ் தாசன் பா.சுதாகர் வரவேற்புரை ஆற்றினார். எழுத்தாளர்கள் இளங்குமரன், தமிழ்வாணன், ஐயப்பன், பண்பொழி அரசு பள்ளி தமிழ் ஆசிரியர் சங்கர சுப்பிரமணியன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நூல் ஆசிரியர் அன்னக்கொடி வாசர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து சிறப்பாக திறனாய்வு செய்த 11 நபர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். முடிவில் நூலகர் ராமசாமி நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!