17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவ பணியில் ஈடுபட்ட மருத்துவர் மற்றும் செவிலியர்கள்..

கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவ பணியில் ஈடுபட்ட மருத்துவர் மற்றும் செவிலியர்கள்..

எழுதியவர்: Abubakker Sithik February 22, 2024, 5:27 pm

திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர், செவிலியருக்கு 6 மாத காலமாக உதவித் தொகை வழங்கப்படாததை அரசின் கவனத்திற்கு தெரியப்படுத்தும் விதமாக கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி பயின்று பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் 50க்கும் மேற்பட்டோர், அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவமனையில், பொதுமக்களுக்கு சிகிச்சைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 25 ஆயிரம் வீதம் உதவித் தொகையாக அரசின் மூலம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இவர்களுக்கு உதவித் தொகை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால், அதனை அரசின் கவனத்திற்கு தெரியப்படுத்தும் விதமாக மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களது ஆடையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு தங்களுக்கு நிலுவையிலுள்ள உதவி தொகையை விரைவில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பணியை புறக்கணிக்காமல், தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!