17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் உலக தாய்மொழி தின கவியரங்கம்; தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்பு..

நெல்லையில் உலக தாய்மொழி தின கவியரங்கம்; தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்பு..

எழுதியவர்: Abubakker Sithik February 22, 2024, 1:08 pm

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உலக தாய்மொழி தின கவியரங்கம் நடந்தது. அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக யுனெஸ்கோ 1999ஆம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து 2000ஆம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ளும் விதமாக நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் கவிதை வாசிக்கும் கவியரங்கம் நடத்தப்பட்டது.

நிகழ்வில் அனைவரையும் கற்ப விருட்சக நற்பணி மன்றத்தின் தலைவர் ரம்யா வரவேற்றார். நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி நிகழ்விற்கு தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசின் தூய தமிழ் பற்றாளர் விருது பெற்ற சிவ செல்வ மாரிமுத்து, மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை லீமா ரோஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து நடந்த கவியரங்கத்திற்கு தென்காசி மாவட்டம் ஜேபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் பேராசிரியர் ராஜன் ஜான் தலைமை வகித்தார். கலைஞரும் தமிழும் என்கிற தலைப்பில் நடைபெற்ற இக்கவியரங்கில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கவிதை வாசித்தனர். நிகழ்வில் ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் மேகலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!