17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அன்னதானம்..

விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அன்னதானம்..

எழுதியவர்: Abubakker Sithik February 22, 2024, 9:17 am

விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தமிழகத்தில் பத்ம ஸ்ரீ கமலஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த கட்சியின் நிறுவனராக கமலஹாசன் செயல்பட்டு வருகிறார். இந்த கட்சியின் 7 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவர்களது கட்சி நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், அன்னதானமும் வழங்கி சிறப்பித்து வருகின்றனர்.

அதனை முன்னிட்டு விருதுநகரில் மக்கள நீதிமய்யம் கட்சியின் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் விருதுநகர் தெப்பக் குளம் அருகில் உள்ள சனீஸ்வரன் கோவில் முன்பு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!