மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை அலுவலகத்தில் மாநிலத்தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெற்றது.இதில் கள்ளர் சமுதாய மக்களுக்கான உரிமை மீட்கும் மற்றும் கள்ளர் சீரமைப்பு துறை மீட்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையுடன் கள்ளர் பள்ளிகளை இணைத்தால் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுக அரசை எதிர்த்து செயல்படுவதென்றும் தேர்தலை கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை சார்பில்; புறக்கணிக்கப் போவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் உடனடியாக தமிழக அரசு கள்ளர் பள்ளிகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பள்ளிக்கல்வித்துறையுடன் கள்ளர் பள்ளிகளை இணைத்தால் திமுகவுக்கு எதிராக செயல்படுவது என தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்
எழுதியவர்: mohan February 21, 2024, 2:08 pm




You must be logged in to post a comment.