17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ அரியநாச்சி அம்மன் பரந்தாங்கி அய்யன் திருக்கோவில் கும்பாபிஷேகம்..

அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ அரியநாச்சி அம்மன் பரந்தாங்கி அய்யன் திருக்கோவில் கும்பாபிஷேகம்..

எழுதியவர்: Abubakker Sithik February 21, 2024, 12:15 pm

அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ அரியநாச்சி அம்மன் பரந்தாங்கி அய்யன் திருக்கோவில் கும்பாபிஷேகம்..

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சி.புதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அரியநாச்சி அம்மன் ஸ்ரீ பரந்தாங்கி அய்யன் மற்றும் பரிவார தெய்வங்கள் கோவில் கும்பாபிஷேகம் மூன்று நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் யாக சாலை பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் நாள் மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் யாக வேள்விகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூன்றாம் நாள் காலை மங்கல இசை முழங்க மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம், அழகர்கோவில், உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் யாகசாலையை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கருடன் வானத்தில் வட்டமிட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவில் கருவறையில் அமைந்துள்ள ஸ்ரீ அரியநாச்சி அம்மன் பரந்தாங்கி அய்யன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விழாவிற்கு வருகை தந்த சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பூஜை மலர்களும், அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!