17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை இஸ்லாமியா பள்ளி குழுமங்கள் சார்பாக அறிவியல் கண்காட்சி ..

கீழக்கரை இஸ்லாமியா பள்ளி குழுமங்கள் சார்பாக அறிவியல் கண்காட்சி ..

எழுதியவர்: ஆசிரியர் February 28, 2018, 9:39 pm

தேசிய அறிவியல் தினமான ஃபிப்ரவரி 28ம் தேதியை முன்னிட்டு கீழக்கரை இஸ்லாமியா கல்வி குழுமங்களில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியில் மாணவர்களின் அறிவியல் படைப்புகள் மற்றும் மாதிரி தொழில்நுட்ப எந்திரங்கள் பலவற்றை கண்காட்சியில் இடம் பெற செய்திருந்தனர். இக்கண்காட்சியை இஸ்லாமியா கல்வி குழுமங்களின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் மற்றும் ஏராளமான பெற்றோர்கள் பார்வையிட்டனர்.

இஸ்லாமியா துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி மற்றும் இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னின்று செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!