17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » புளியங்குடி நெல்லை இடையே 1 TO 1 அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட வேண்டும்; எஸ்டிபிஐ வலியுறுத்தல்..

புளியங்குடி நெல்லை இடையே 1 TO 1 அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட வேண்டும்; எஸ்டிபிஐ வலியுறுத்தல்..

எழுதியவர்: Abubakker Sithik February 20, 2024, 10:25 am

புளியங்குடி நெல்லை இடையே 1 to 1 பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட வேண்டும்; எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்..

புளியங்குடி பகுதியிலிருந்து நெல்லைக்கு காலை நேரத்தில் இயக்கப்பட்டு வந்த 1 to 1 பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அதிருப்தியடைந்து உள்ளதாகவும், இந்த பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் எனவும், எஸ்டிபிஐ கட்சி மாவட்டத் துணை தலைவரும், கடையநல்லூர் தொகுதி பொறுப்பாளருமான யாசர்கான் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், புளியங்குடியில் இருந்து நெல்லைக்கு அதிகாலை 5.15, 5.30 , 5.45 மணிக்கு 1 to 1 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இந்த பேருந்துகள், புளியங்குடி பகுதியிலிருந்து தென்காசி வரை சாதார பேருந்தாகவும், தென்காசி பகுதியிலிருந்து நெல்லைக்கு 1 to 1 சேவை பேருந்தாகவும் இயக்கப்பட்டு வந்தன. இந்த பேருந்துகளில் புளியங்குடி, சொக்கம்பட்டி, கிருஷ்ணாபுரம், கடையநல்லூர், இடைகால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பயணிகள், பணியாளர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், வியாபாரிகள் மற்றும் நெல்லை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு செல்லக் கூடிய முதியோர்கள் என பலரும் சென்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக புளியங்குடியில் இயக்கப்பட்டு வந்த 1 to 1 பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டன. இந்த பஸ்கள் வேறு டிப்போக்களுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்த பேருந்துகளை பயன்படுத்தி வந்த பயணிகள் தற்போது கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். என மக்கள் நலன் கருதி இந்த பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் கடையநல்லூர் தொகுதி பொறுப்பாளர் யாசர்கான் வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!