18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் நேர்மை மிக்க தம்பதியர்; மாவட்ட எஸ்.பி. பரிசுகள் வழங்கி பாராட்டு..

தென்காசி மாவட்டத்தில் நேர்மை மிக்க தம்பதியர்; மாவட்ட எஸ்.பி. பரிசுகள் வழங்கி பாராட்டு..

எழுதியவர்: Abubakker Sithik February 20, 2024, 9:39 am

சாலையோரம் கிடந்த தங்க செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மை நிறைந்த தம்பதியர்; தென்காசி மாவட்ட எஸ்.பி. பாராட்டு..

தென்காசி மாவட்டத்தில் சாலையோரம் கிடந்த தங்கச் செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மை நிறைந்த தம்பதியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியை சேர்ந்த குமார் என்ற நபர் 15.02.2024 அன்று இரவு நேரத்தில் அவரது மனைவியுடன் ஆய்க்குடி மாயாண்டி கோவில் அருகே உள்ள கடைக்குச் சென்று வீடு திரும்பும் வழியில் சாலையோரம் கீழே கிடந்த சுமார் 2,50,000 ரூபாய் மதிப்பிலான 05 பவுன் தாலி செயினை எடுத்து உரிய முறையில் ஆய்க்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் குமார் மற்றும் அவரது மனைவியின் நேர்மையை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் பொன்னாடை அணிவித்து பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தென்காசி மாவட்டத்தில் நேர்மை குணம் நிறைந்த ஆய்க்குடி தம்பதியரை பொது மக்கள், காவல் துறையினர் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!