17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி மாணவர்களுக்கான இண்டராக்ட் கிளப் துவக்க விழா..

கீழக்கரை முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி மாணவர்களுக்கான இண்டராக்ட் கிளப் துவக்க விழா..

எழுதியவர்: ஆசிரியர் February 18, 2024, 12:50 am

கீழக்கரை,பிப்.20- கீழக்கரை முஹைத்தீனிய்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி மாணவர்களுக்கான இண்டராக்ட் கிளப் துவக்க விழாவில்,கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் கீழை கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் இணைந்து நடத்திய மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கல்வியாளரும் எழுத்தாளருமான பேராசிரியர் முகமது அப்துல் காதர் மற்றும் ரோட்டரி சேர்மன். சண்முக ராஜேஸ்வரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.பள்ளி கல்வி குழு தலைவர் முகைதீன் இபுராகிம் தலைமை தாங்கினார், கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் முனைவர். சுல்தான் சம்சுல் கபீர் , சவுதி அரேபியா அல்பனியா பொது மேலாளர் முகைதீன் சீனி அலி, முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் செய்யது ராசிக்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேராசிரியர் அஹமது ஹுசேன் ஆசிப் வரவேற்றார். கீழை கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹமீது ராஜா, 1-வது வார்டு கவுன்சிலர் முகமது பாதுஷா, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சுந்தரம், ரோட்டரி சங்கத்தின் பொருளாளர் சுப்பிரமணியன், செல்வநாராயணன், சிவகார்த்திக், சஃபீக்,மிஃப்தாஹுதீன் , கீழக்கரை ரோட்டராக்ட் மற்றும் கீழக்கரை இன்டராக்ட் கிளப் ஆப் முஹைத்தீன்னியா பள்ளியின் உறுப்பினர்கள் உள்பட பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இண்டராக்ட் தலைவராக ருவைதும், செயலாளராக மஃபாசும் தேர்வாகினர். முடிவில் பள்ளி முதல்வர் அஸ்வத் உம்மா நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!