17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கமுதியில் வேளாண்மை தொழில் நுட்ப கருத்தரங்கம் !

கமுதியில் வேளாண்மை தொழில் நுட்ப கருத்தரங்கம் !

எழுதியவர்: Baker BAker February 17, 2024, 11:16 pm

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தனியார் மகாலில் இராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விரிவாக்க கல்வி இயக்ககம் இணைந்து மாவட்ட அளவிலான முண்டு மிளகாய் சாகுபடி மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றிய தொழில்நுட்ப கருத்தரங்கம் நடத்தினார்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் விரிவாக்கக் கல்வி இயக்குனர் முனைவர் முருகன் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வள்ளல் கண்ணன் முன்னிலை வகித்தார். இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக வேளாண்மை தொழில்நுட்ப பயன்பட ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் ஷேக் என் மீரான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இயற்கை முறையில் விவசாயம் செய்த விவசாயி ராமர் என்பவருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி இணை பேராசிரியர் தா பிரபு ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் இணை பேராசிரியர் ராம்குமார் தஞ்சாவூர் வேளாண்மை கல்வி இணை பேராசிரியர் வ ராமமூர்த்தி ராமநாதபுரம் விற்பனை குழு செயலாளர் ராஜா கமுதி வட்டாட்சியர் சேதுராமன் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இறுதியில் ஜெகதீசன் நன்றியுரை வழங்கினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!