17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாய் முகமூடி அணிந்து நகர்மன்ற கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் வார்டு கவுன்சிலர்; தென்காசியில் பரபரப்பு..

நாய் முகமூடி அணிந்து நகர்மன்ற கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் வார்டு கவுன்சிலர்; தென்காசியில் பரபரப்பு..

எழுதியவர்: Abubakker Sithik February 17, 2024, 4:04 pm

நாய் முகமூடி அணிந்து கொண்டு நகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற வார்டு கவுன்சிலர்; தென்காசியில் பரபரப்பு..

தென்காசியில் வெறிநாய் தொந்தரவை கட்டுப்படுத்த வலியுறுத்தி நாய் முகமூடி அணிந்தும், நாய்போன்று குரைத்து கொண்டும் நகர்மன்ற தலைவரிடம் கவுன்சிலர் மனு அளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி நகராட்சி கூட்ட அரங்கில் நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தலைமையில் நகர்மன்ற அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் நகர்மன்ற துணைத்தலைவர் கே.என்.எல். சுப்பையா, நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மன்ற பொருள்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, தென்காசி சுற்றுவட்டார பகுதிகளான கொடிமரம், மவுண்ட் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெறிநாய்கள் தொந்தரவு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டும் வகையில், தென்காசி 20 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் M.A.ரஃபீக் நாய் முகமூடி அணிந்து நகர் மன்ற கூட்டத்தில் பங்கேற்று நகர் மன்ற தலைவர் ஆர். சாதிரிடம் கோரிக்கை மனு அளித்தார். சிரித்த நிலையில், நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் மனுவை பெற்றுக் கொண்டார். இச்சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!