17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதில்மேல் பூனை போல, தேமுதிகவின் தற்போதைய நிலை!- குழப்பத்தில் பிரேமலதா விஜயகாந்த்..

மதில்மேல் பூனை போல, தேமுதிகவின் தற்போதைய நிலை!- குழப்பத்தில் பிரேமலதா விஜயகாந்த்..

எழுதியவர்: Askar February 17, 2024, 1:52 pm

பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என திடீரென தேமுதிக மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் இதனால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அல்லது பாஜகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்றும் இரு தரப்பிடமும் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

14 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி கொடுக்கும் அணியுடன் மட்டுமே கூட்டணி என்று பிரேமலதா அறிவித்திருந்தாலும் மூன்று தொகுதிகள் கொடுக்க மட்டுமே பாஜக மற்றும் அதிமுக கூறியுள்ளதால் எந்த கூட்டணியில் சேர்வது என்ற குழப்பத்தில் பிரேமலதா இருப்பதாக தெரிகிறது.

பாஜக கூட்டணியில் இணைந்தால், தேர்தலில் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் ராஜ்யசபா தொகுதி எம்பி மூலம் மந்திரி பதவி கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் பிரேமலதாவிற்கு பாஜக கூட்டணியில் சேரவே விருப்பம் அதிகம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் கட்சியில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் பிரேமலதா குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!