17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது..

மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது..

எழுதியவர்: Askar February 15, 2024, 8:05 pm

மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது..

ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு, கல்வி சார் செயல்பாடுகளில் சிறந்தோருக்கு பாராட்டு, விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு, நன்னடத்தை செயல்கள் புரிந்தவர்களுக்கு பாராட்டு, காலை மதிய உணவு பணியாளர்களுக்கு பாராட்டு ஆகிய ஐம்பெரும் விழாக்கள் நடைபெற்றது. விழாவில் மாணவ, மாணவிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், காலை மதிய உணவு பொறுப்பாளர்கள் பாராட்டப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒரு லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் மீனாட்சி பவன் ஹோட்டல் உரிமையாளர் துரை, வங்கி மேலாளர் பிரபு, சமூக ஆர்வலர்கள் செந்தில், அசோக்குமார், பாலமுருகன், பிகே புட்ஸ் உரிமையாளர் பிரபா கதிர்வேல், சிலம்பம் மாஸ்டர் பாண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். விழாவில் பறை இசை சிலம்பம் பேச்சு முதலியன நடைபெற்றது. ஆசிரியைகள் அனுசியா, அருவகம் ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவில் வார்டு உறுப்பினர்கள் பெற்றோர்கள் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சுகுமாறன், சித்ரா, தமிழ்ச்செல்வி, அகிலா, அம்பிகா, சாந்தி, ராணி ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!