17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாடு முழுவதும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு..

நாடு முழுவதும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு..

எழுதியவர்: Askar February 15, 2024, 7:58 am

நாடு முழுவதும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

தேர்வை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் 39 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், காலை 10 மணிக்கு முன்பே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து சி.பி.எஸ்.இ.  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வருகிற ஏப்ரல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தேர்வு மையங்களுக்கு காலை 10 மணிக்கு முன்பே வர வேண்டும். தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும். அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும். காலை 10 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகை தரும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்கள். அதன் பிறகு எந்த மாணவர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!