18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

இராஜபாளையத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

எழுதியவர்: Askar February 14, 2024, 9:35 pm

இராஜபாளையத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் போக்குவரத்து காவல்துறை காவல் சார்பில் நகர் ஆய்வாளர் சீமான் தலைமையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் இராஜபாளையம் காவல்துறை துணைக் காணிப்பாளர் நாகராஜன் வழிகாட்டுதலின் பேரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ,கலை குழுவினர் நடனமாடியும் தலைக்கவசம் அணியாமல் மற்றும் மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்து விபத்துக்களில் சிக்கி படுகாயம் அடைந்தது அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மணைக்கு கொண்டு செல்வது என தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

நகர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் பரமசிவம் பாரதராஜன், ஆகியோர் அந்த வழியாக தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டியதோடு தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!