ராமநாதபுரத்தில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்திய கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் கோட்டப்பொறுப்பு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சேகர் முதன்மை ஆலோசகர் ஜான் பிரிட்டோ முன்னிலை வைத்தனர். டார்கெட் என்ற பெயரால் நடைபெறும் அடக்குமுறை அராஜகத்தை கண்டிக்கிறோம் கமலேஷ் சந்திரா கமிட்டியின் சி பாரிசுகளை அமல்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர் கோட்டப் பொருளாளர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்
ராமநாதபுரம் கோட்ட கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் !
எழுதியவர்: Baker BAker February 14, 2024, 10:18 am




You must be logged in to post a comment.