17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்க துவக்க விழா !

கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்க துவக்க விழா !

எழுதியவர்: Baker BAker February 13, 2024, 4:21 pm

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்க துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்க உறுப்பினர் உமர்தீன் தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜெயா உஷாராணி இருவரும் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும் மாவட்ட பாரத சாரண சாரணியர் இயக்க ஆணையருமான இரா .பிரின்ஸ் ஆரோக்கியராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மாவட்ட பாரத சாரண சாரணிய இயக்க செயலாளர் சிவா. செல்வராஜ் இயக்க பயிற்சியாளர் நாராயணன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ஹமீது நிசா வரவேற்புரை வழங்கினார். இணைய வழிக் கல்வி வானொலி குடியரசு தின விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியை குர்ரத்துநிஷா நன்றியுரை வழங்கினார். பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!